தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக முன்னதாக நடந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதையடுத்து, எஸ்.ஐ.ஆர். தொடர்பான மற்றும் இதர கட்சி கூட்டங்களுக்கு தவெகவையும் அழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எஸ்.ஐ.ஆரில் உள்ள சிக்கல்களையும் அந்த கடிதத்தில் பட்டியலிட்டுள்ளார்.
"மக்களின் வாக்களிக்கும் உரிமையே ஜனநாயகத்தின் வெற்றி. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான காலம் மிகவும் குறைவாக உள்ளது.
மேலும் பண்டிகை காலம் என்பதால் இந்த பணிகளில் சிக்கல் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்தான் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள்(எஸ்எஸ்ஆர்) நடைபெற்ற நிலையில் மீண்டும் மக்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் சோதிக்கிறது.
பண்டிகை காலம், வாக்குச்சாவடி அலுவலர்கள் தயார் நிலையில் இல்லை. பெரும்பாலான அலுவலர்களிடம் 2002 /2005 வாக்காளர் பட்டியல் இல்லை. இந்த பணியில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுடைய பள்ளி/ அங்கன்வாடி வேலைகளையும் கவனித்துக்கொண்டே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களிடையே எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை.
முதலில் எந்த ஆவணங்களும் கொடுக்கத் தேவையில்லை என்றும் பின்னர் அதிகாரி கேட்டால் ஆவணம் கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் பல குழப்பங்கள் உள்ளன.
மேலும் எஸ்ஐஆர் தொடர்பான பல்வேறு குழப்பங்கள் மக்களுக்கு இருக்கின்றன. எந்தவொரு தமிழரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கப்படக்கூடாது" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.