எடப்பாடி பழனிசாமியுடன் பேசியது என்ன? - ஜி.கே.வாசன் பேட்டி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்திப்பு...
GK vasan meets Edappadi palanisamy in salem
எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே. வாசன் (கோப்புப்படம்)X/ gk vasan
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்துப் பேசியுள்ளார்.

சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஜி.கே. வாசன்,

"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் இபிஎஸ்ஸைச் சந்தித்தேன். இது மரியாதை ரீதியான சந்திப்பு. அரசியல் ரீதியான சந்திப்பும்கூட.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் அதிகரிக்க இபிஎஸ்தான் காரணம். அவர் 173 சட்டப்பேரவை தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல் பெரிய கட்சி அதிமுகதான், மத்தியில் பெரிய கட்சி பாஜக. இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணியின் மூலமாக இணைந்துள்ளன. இந்த கட்சிகள் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. பிகார் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் சேருவார்கள். காத்திருங்கள்" என்று பேசினார்.

Summary

GK vasan meets Edappadi palanisamy in salem

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com