டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

வங்கதேச வன்முறை: ஷேக் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பு!

வங்கதேச வன்முறை வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி எனத் தீர்ப்பு...

Sheikh Hasina

கோப்புப்படம் - ANI

Updated On :

வங்கதேச வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

தொடர் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதன்பின்னர் அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் கடந்த ஓராண்டாக தஞ்சமடைந்துள்ளார்.

தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே வன்முறையில் பலர் கொல்லப்பட்டதற்கு எதிராக முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா மற்றும் அப்போதைய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக செய்த குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்த நாட்டில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஷேக் ஹசீனா, தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஹசீனா வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதையடுத்து முன்னதாகவே தலைநகர் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Summary

Bangladesh ousted PM Hasina convicted in students crackdown case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.