

மேக்கேதாட்டு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மேக்கேதாட்டு திட்ட அறிக்கைக்கு எதிரான தமிழக அரசின் மனுவை வியாழக்கிழமை நிராகரித்த உச்சநீதிமன்றம், மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது மத்திய நீா்வள ஆணையம் முடிவு எடுக்கும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவக்குமார், “மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அரசின் வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் மற்றும் முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மாநிலத் தலைவர் என்ற முறையில், கட்சியின் தலைவரை இயல்பாக சந்தித்தேன். கட்சி அலுவலகங்கள் திறப்பு மற்றும் கட்சி சம்பந்தமான சிலவற்றை ஆலோசித்தோம்.” என்றார்.
முன்னதாக, மேக்கேதாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் எந்தவொரு முயற்சியையும், தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறியும்” என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.