

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவ. 19) கோவைக்கு வருகைத்தரவுள்ளார்.
தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 நாளை முதல் 3 நாள்களுக்கு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைத்து, சிறப்பாகச் செயல்பட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கவுள்ளாா்.
இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தலைமை வகிக்கிறாா். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனா்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகைப்புரியவுள்ளார். இதனையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள மோடி,
''தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் இதுவரை 6.07 கோடி படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.