தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் அவதி!

ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..

News image

ஏற்காட்டில் பனிமூட்டம்

Updated On :18 நவம்பர் 2025, 6:36 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இன்று காலை முதலே கடும் பனிமூட்டம்‌ நிலவி வருகிறது. பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

மேலும் கடும் பனிமூட்டம்‌ காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சாலைகளில் ஊர்ந்து சென்றனர். கடும் பனிமூட்டம்‌ காரணமாகக் கட்டட தொழில் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வேலைகள் முடங்கியது.

மேலும், கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அறையிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டத்தால் ஏற்காடு வெள்ளை கம்பளம் போர்த்தியதுபோல் காட்சி அளிப்பது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Summary

Tourists suffered due to heavy fog in Yercaud.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.