

சென்னை: தமிழகத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்திருந்த நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நின்று சூரியன் முகம்காட்டி வருகிறார்.
இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நவ. 19ஆம் தேதி காலை வரை கனமழை பெய்துள்ளது. பிறகு, இந்த மழை அளவு மெல்ல குறைந்துவிடும்.
சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு ஒரு இடைவேளை, வீட்டில் துணிகளை உலர்த்த மிகச் சிறந்த நாள். மீண்டும் நாளை மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையிலும் நான்கு கனமழைகள் பதிவாகியிருந்தன. நவ. 20 முதல் மீண்டும் மழை தொடங்கும்.
சக்கரம்... அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது. இது உண்மையில் தமிழகத்துக்கு வாழ்வா - சாவா போன்ற சக்கரம்தான். குறிப்பாக வட தமிழக மாவட்டங்களுக்கு மட்டும் ஒரு சின்ன நம்பிக்கை இருக்கிறது. அனைவரின் எதிர்பார்ப்பு சென்னைக்கு மேலும் நல்ல மழை வேண்டும் என்பதே. ஆனால், தற்போதைக்கு ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து, ஏரிகளிலும் நீர்மட்டம் கணிசமாக உள்ளது. இதனால் அங்குள்ள நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழைப்பொழிவு நேற்று கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.