எஸ்ஐஆர் படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்! புதிய முயற்சி!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை நிரப்ப செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணையதளம் ஒன்றை அப்பாஸ் என்ற இளைஞர் உருவாக்கியுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்குள்பட்ட பட்டேல் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் ஏஐ தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்காக பல்வேறு ஏஐ தொழில்நுட்பத்திலான செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்கியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்வதில் பொதுமக்கள் ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் எஸ்ஐஆர் படிவம் விநியோகம் மற்றும் பூர்த்தி செய்த படிவங்களை வசூலிக்கும் அரசு ஊழியர்களும் பணிச்சுமை காரணமாக சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும், எஸ்ஐஆர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்வதற்கு பழைய ஆவணங்கள் இல்லாத நிலையும், அதனை தேர்தல் ஆணையத்தில் பெற முடியாத நிலையும் இருந்து வருகிறது.
இதற்காக ஏஐ தொழில்நுட்பத்திலான இணைய தளத்தை அப்பாஸ் உருவாக்கியுள்ளார். தான் தயாரித்த இந்த இணைய தளம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாஸ் கூறியதாவது:
”எஸ்ஐஆர் படிவத்தை எளிதில் பூர்த்தி செய்வதற்காகவும், படிவத்திற்கு தேவையான தகவல்களை வாக்காளர் பெயர், உறவினர் பெயர், பாகம் எண் என எதனை கொடுத்தாலும், அது தொடர்பாக விபரங்கள் கிடைக்கப்பெறுவதுடன் மட்டுமல்லாமல் படிவத்தை பூர்த்தி செய்யும் தகவலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தருகிறது.
இதற்காக ஆர்கே நகர் தொகுதிக்குள்பட்ட 38 ஆவது வார்டில் உள்ள வாக்களார்களின் விபரங்களை வைத்து இணையதளத்தை உருவாக்கி அப்பகுதி மக்களுக்கு உதவி செய்து வருகிறேன்.
ஒரு வார்டில் செய்துள்ள இந்த தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 கோடி வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையிலும் உருவாக்க இயலும்.
இதற்கு தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்தால் தயார் செய்ய இயலும்” என அவர் தெரிவித்தார்.
A young man has used artificial intelligence (AI) technology to fill out a special serious correction form for the voter list.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

