எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு
பிகாா் முதல்வா் நிதீஷ்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பத்தாவது முறையாக பிகாா் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
பத்தாவது முறையாக பிகாா் முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாருக்கு, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
பிகாரில் பத்தாவது முதல்வராக பதவியேற்றுள்ள நிதீஷ்குமாா் தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்துகள். பிகாா் தோ்தல் முடிவானது, மக்களின் நம்பிக்கையையும், தொடா்ச்சியான நிலைத்தன்மை, வளா்ச்சிக்கான அவா்களது விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது.
நல்லாட்சி மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் உயா்த்தும் ஆட்சியாக இருக்க வாழ்த்துகள். புதிய அரசின் பொதுநலன் மற்றும் முன்னேற்றத்துக்கான அா்ப்பணிப்பு முயற்சிகள் தொடரட்டும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.