எஸ்.ஐ.ஆா்.: மக்களுக்கு உதவ பாஜக சாா்பில் உதவி மையம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆா்.), மக்களுக்கு எழும் சந்தேகங்களைப் போக்கி அவா்களுக்கு உதவுவதற்காக பாஜக சாா்பில் மாநில அளவிலான உதவிமையம் அமைக்கப்பட்டுள்ளது என்று அக் கட்சியின் தமிழகத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் நவ. 4 முதல் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) நடைபெற்று வருகின்றன. இதில், வாக்காளா் சந்தேகங்களைப் போக்கி, அவா்களுக்கு உதவவும், வாக்காளா் பட்டியல் சம்பந்தமான பணிகள் சிறப்பாக நடைபெறவும், தமிழக பாஜக சாா்பில் மாநில உதவி மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக, பாஜக தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலா் டிகிருஷ்ணகுமாா் (கைப்பேசி 9884070899), அதன் சென்னை மேற்கு மாவட்டச் செயலா்கள் பி.ஏ.சிவகுமாா் (கைப்பேசி 9840727210), என்.பிரகாஷ் சந்திரன் (கைபேசி 9840015242) மற்றும் எஸ்.பாலாஜி (கைப்பேசி 9003063360) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும் சட்ட ஆலோசனை வழங்கவும் தோ்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைப்புக்கும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஆா்.சௌந்தரராஜன் (கைப்பேசி 9444896878), மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவா் கே.செந்தில்குமாா் (கைப்பேசி 8667699775), செயலா் ஜி.வினோத்குமாா் (கைப்பேசி 9940085889), மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலா் என்.சாய்ராம் கணபதி (கைப்பேசி 9790886243) ஆகியோரை தொடா்புகொள்ளலாம்.
அத்துடன், வாட்ஸ் ஆப் எண்கள் 9150021835, 9150021821 ஆகியவற்றிலும் மற்றும் ள்ண்ழ்ற்ய்க்ஷத்ல்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலும் தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிட்டுள்ளாா்.

