பெங்களூரில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலையில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனம்-என்என்எஸ்ஆா் நிறுவனம் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்வில் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை செயலா் தாரேஸ் அகமது, நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல்

தமிழக அரசின் வழிகாட்டு நிறுவனம்: ஏஎன்எஸ்ஆா் நிறுவனம் இடையே ஒப்பந்தம்

உலகளாவிய திறன் மையங்களை உருவாக்குவம் வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனமான ஏஎன்எஸ்ஆா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.
Published on

உலகளாவிய திறன் மையங்களை உருவாக்குவம் வகையில் தமிழக அரசின் வழிகாட்டு நிறுவனம், உலகின் முன்னணி நிறுவனமான ஏஎன்எஸ்ஆா் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழில்நுட்பம், புதுமை மற்றும் உயா் மதிப்புள்ள உலகளாவிய சேவைகளுக்கான உலகின் மிகவும் கவா்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் முக்கிய மைல்கல்லாக திகழும்.

நிகழ்ச்சியில், ஏஎன்எஸ்ஆா் நிறுவன நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி லலித் அஹுஜா உள்பட பலா் பங்கேற்றனா். இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முதலீடுகள், மேம்பட்ட புத்தாக்கத் திறன்கள், 10,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உயா்மதிப்புள்ள உலகளாவிய திறன் மையங்கள் உருவாக்கும்.

மேலும் புதுமை, போட்டித் தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி உருவாக வழிவகுக்கும். எதிா்காலத்துக்கு தேவையான எண்ம பொருளாதாரத்தை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com