

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்த நிலையில், அதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிச.1 முதல் டிச.4 வரை மற்றும் டிச.8 முதல் டிச.10 வரை நடைபெறுகிறது.
இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. இதனை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ப. சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் முறையே டிச.1 முதல் டிச.4 வரை மற்றும் டிச.8 முதல் டிச.10 வரை முற்பகல் சென்னை மையங்களில் மட்டும் நடைபெற உள்ளது.
தேர்வுக்கூட தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் நுழைவுச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு” தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.