சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு!

சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று (நவ. 23) துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
காயமடைந்த நவீனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
காயமடைந்த நவீனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Published on
Updated on
1 min read

சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று (நவ. 23) துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட சுமார் 20 கிலோ கஞ்சா வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியான வல்லம்படுகை மெயின் ரோட்டைச் சேர்ந்த மோகன் மகன் நவீன் (24) என்பவரை சுமார் ஒரு கிலோ கஞ்சா வழக்கில் சனிக்கிழமை அன்று அண்ணாமலை நகர் போலீசார கைது செய்தனர்.

இவ்வழக்கில் காவலர்களை கத்தியைக்காட்டி மிரட்டியதால் கஞ்சாவை மீட்க ஞாயிற்றுக்கிழமை காலை காலை சுமார் 6 மணியளவில் மாரியப்பாநகர் தென்புறமுள்ள முட்புதருக்கு சென்ற போது, அந்த இடத்தில் திடீரென காவலர் அய்யப்பனை மறைத்து வைத்திருந்த மற்றொரு கத்தியை கொண்டு தாக்க முயன்றார்.

காவல் ஆய்வாளர் அம்பேத்கர் எச்சரிக்கை செய்தும் கேட்காமல் முன்னேறி போலீசாரை வெட்ட வந்தவரை துப்பாக்கியால் முழங்காலுக்குக் கீழே சுட்டு வளைத்துப் பிடித்தனர்.

காயமடைந்த நவீன், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயம் அடைந்த காவலர் அய்யப்பன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிக்க | விஜய் மக்கள் சந்திப்பு: குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை?

Summary

Ganja dealer shot dead in Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com