

கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இங்கு பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளை நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை செமஸ்டர் தேர்வுகள் ஒத்தவைக்கப்படுகிறது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மனோன்மணியம் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.