தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 23) விடுமுறை அறிவிப்பு தொடர்பாக...
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்  மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(நவ.23) கனமழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு அணியினர் தூத்துக்குடி மாவட்டத்திலும், ஒரு அணி திருநெல்வேலி மாவட்டத்திலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,தென்காசி, நெல்லை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ. 23) விடுமுறையை அளித்து, அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Summary

A holiday has been declared for schools and colleges in Tenkasi and Nellai districts tomorrow (Nov. 23).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com