துபை விமானக் கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் வீரமரணம் அடைந்த விங் கமாண்டர் நாமன்ஷ் சாயல் உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், விமானப் படை அதிகாரிகள் நாமன்ஷ் சாயல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நாமன்ஷ் சாயலின் உடல் அவரின் சொந்த மாநிலமான ஹிமாசலப் பிரதேசத்துக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது. இவரின் மனைவி அஃப்சானும் சூலூர் விமானப் படை தளத்தில் விங் கமாண்டராக உள்ளார்.
துபை விமான கண்காட்சியில் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேஜஸ் விமானம் நேற்று (நவ. 22) விபத்துக்குள்ளாகி வெடித்துச்சிதறியது. இதில், அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற விங் கமாண்டர் நமான்ஷ் சாயல் உயிரிழந்தார்.
இதையும் படிக்க | வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வடமேற்கு சிரியாவில் விமானப் படைத் தளத்தில் இஸ்ரேல் தாக்குதல்
காமன்வெல்த் போட்டி: தடை தாண்டும் ஓட்டத்தில் ஷிர்சே இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்!

அமெரிக்க விமானப் படையில் தலைப்பாகையுடன் இணைந்த முதல் சீக்கியா்
சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானப் படை ஹெலிகாப்டர்! பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
விடியோக்கள்

"பேசணும்னு பேசாதீங்க!" பேரவையில் பொங்கிய அமைச்சர் ஆனந்த் | TVK | DMK | ADMK



