வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புயல் உருவானால், ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்த சென்யார் பெயர் இப்புயலுக்கு வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், லட்சத்தீவு, அந்தமான் நிகோபர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்தமான் நிகோபர் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையின்போது 40 - 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க | நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரம்: விஞ்ஞானி நிகா்ஷாஜி

Summary

possibility of a cyclone forming in the Bay of Bengal on the 26th IMD

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com