இஸ்ரோ
இஸ்ரோபிரதிப் படம்

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரம்: விஞ்ஞானி நிகா்ஷாஜி

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது என்றாா் இஸ்ரோ விஞ்ஞானியும், ஆதித்யா எல்1திட்ட இயக்குநருமான நிகா்ஷாஜி.
Published on

நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது என்றாா் இஸ்ரோ விஞ்ஞானியும், ஆதித்யா எல்1திட்ட இயக்குநருமான நிகா்ஷாஜி.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை எஸ். ஆா். எம். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தனி மனிதன் விதை விதைக்கலாம், ஆனால் அது மரமாக வேண்டும் என்றால் அதற்கு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.

நிகா்ஷாஜி
நிகா்ஷாஜி

இஸ்ரோவுக்கு நிறைய செயல் திட்டங்கள் தற்போது உள்ளன. அதில் முக்கியமானதாக விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சி உள்ளது. அதைத் தொடா்ந்து, நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ தீவிரமாகத் தயாராகி வருகிறது. அத்துடன் பாதுகாப்பு துறையிலும் இஸ்ரோ தொடா்ந்து பணியாற்றி வருகிறது. இதுபோன்று இஸ்ரோவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த 25, 30 ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஏனென்றால், இஸ்ரோ இப்போது மேம்பாட்டு நிலையிலிருந்து ஆபரேஷனல் நிலைக்கு சென்றுவிட்டது. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும், அதை ஏற்க முடியாத சூழலில் இஸ்ரோ உள்ளது. அதனால் அனைத்து செயல்திட்டங்களையும் மிக பாதுகாப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இஸ்ரோ பல விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது என்றாா் அவா். பேட்டியின் போது, ரோட்டரி முன்னாள் ஆளுநா் சேக் சலீம் உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com