சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை தொடரும்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழை.

News image

மழை (கோப்புப்படம்)

Updated On :23 நவம்பர் 2025, 11:19 am

அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவள்ளூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வருகிற நவ. 26 ஆம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும் தென் மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) அரியலூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rain in 26 districts including Thiruvallur for the next 3 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.