திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! உயிர் தப்பிய பயணிகள்!

இரண்டு பேருந்துகள் வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது தொடர்பாக...

News image
விபத்துக்குளான பேருந்து.
Updated On :23 நவம்பர் 2025, 10:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்து வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. 70க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 50-பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அதுபோல, கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து சுமார் 50-பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்துகளும் தஞ்சாவூர் அருகே நெடார் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு பேருந்து இடது பக்கம் சாலையோர‌ பள்ளத்தில் கவிழ்ந்த நிலையிலும், மற்றொரு பேருந்து இடது பக்கம் மரத்தில் மோதியும் நின்றன.

இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இவர்கள் தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..

இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் நிலைய போலீஸார், போக்குவரத்தை சரிசெய்து, விபத்து குறித்து மேற்படி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

Two buses collide head-on in accident

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.