அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (காலை 10 மணி வரை ) நாகை, கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
குறிப்பாக, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று (நவ.23) பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்படுட்ள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | காஞ்சிபுரத்தில் இன்று மக்களை சந்திக்கிறாா் விஜய்!
Weather update Rain chance for 5 districts of tamilnadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

