

தமிழகத்தில் இன்று காலை முதல் மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர் உள்பட 24 மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக கடந்த ஒரு சில நாள்களாக கனமழை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை எதிரொலியாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தாமிரபரணி நதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி முதல் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, விழுப்புரம், விருதுநகர், துத்தூக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்! திறந்து வைத்தார் உதயநிதி!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.