3 வேளாண் சட்டங்கள் என்ன என்று தெரியுமா? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் விமர்சனம்.
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் என்ன என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியுமா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியிருக்காது என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

சட்டப்பேரவை உறுப்பினரானது முதல் தற்போது வரை விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளுக்கு என்றும் ஆதரவாக இருந்தது அதிமுக அரசு; நானும் ஒரு விவசாயிதான்.

பச்சைத் துண்டு அணிந்து விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சிக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆனால், 3 வேளாண் சட்டங்கள் என்ன என்று முதல்வருக்குத் தெரியவில்லை.

காவிரி படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்தவர் மு.க. ஸ்டாலின். தமிழகத்திலுள்ள விவசாயிகளின் கண்ணீரை அறியாமல் அவர் திரைப்படம் பார்க்கச் செல்கிறார்.

நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. கோரிக்கைகளை நீங்கள் கேட்டு வாங்க வேண்டும். அதைக்கூட எதிர்க்கட்சி தான் செய்கிறது.

முழுக்க முழுக்க அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்கூட்டியே திட்டமிட்டு பயிர்களை அறுவடை செய்திருந்தால், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியிருக்காது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து இறந்தவர்களை வைத்து வாக்குகளைப்பெற திமுக முயற்சிக்கிறது. அவர்கள்தான் ஆளும் கட்சி. சிறப்பு தீவிர திருத்தம் கொண்டுவருவதில் அவர்களுக்கு என்ன பிரச்னை? எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | இதுவரை 6.16 கோடி பேருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

Summary

Edappadi palanisami question to the CM MK Stalin on 3 agricultural laws

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com