தென்காசியில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி...
tenkasi courtallam falls
X
Published on
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் முதலே தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அருவிகளில் குளிக்கத் தடை

தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 2-ம் நாளாக இன்று மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நெல்லை மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன.

Summary

Heavy rains in the Tenkasi district have caused severe flooding at the Courtallam Falls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com