ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மிக கனமழை எச்சரிக்கை! நெல்லை மக்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மக்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
மிக கனமழை- PTI
Updated On :24 நவம்பர் 2025, 2:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு திங்கள்கிழமை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்திற்கு திங்கள்கிழமை மிக கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதையடுத்து, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம் என்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் - 0462- 250 1070 மற்றும் அவசர உதவி கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலியாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திருநெல்வேலி நகர மேலப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தாமிரபரணி நத்தம் பாலம் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அவ்வழியாக யாரும் வர வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.