

கோவை வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆர்யை சரிவரத் தயார் செய்யாததைக் கண்டித்தும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டம் கல்லூரி மாணவர்கள் இடையே அதிகரித்து உள்ளதைக் கண்டித்தும் கோவை பவர் ஹவுஸ் பகுதியில் பா.ஜ.க இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கோபேக் ஸ்டாலின் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வருகை தருகிறார். அங்கு செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறாா்.
பின்னா் செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் என 150 பேருடன் கலந்துரையாடுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.