கோவையில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(நவ. 25) திறந்துவைத்தார்.
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கோவை காந்திபுரத்தில் ரூ. 208 கோடியில் 45 ஏக்கர் பரப்பில் தோட்டங்கள், திறந்தவெளி அரங்கு, உணவகம், செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவைகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நீர்த் தோட்டம், பாலைவனத் தோட்டம், மூங்கில் தோட்டம், ரோஜா தோட்டம் என 23 விதமான தோட்டங்கள், 500 பேர் அமரக் கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம், 400 கார்கள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மழை நீர் சேகரிப்பு வடிகால், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக விளையாட்டுத் திடல்கள், அருங்காட்சியகம், படிப்பகம், பேட்டரி வாகனங்கள், உடற்பயிற்சிக் கூடம், நடைபாதை உள்ளிட்ட அம்சங்கள் இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க | நவ. 29ல் சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.