எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று (நவ. 26) ராஜிநாமா செய்தார்.
பதவியை ராஜிநாமா செய்த செங்கோட்டையன்
பதவியை ராஜிநாமா செய்த செங்கோட்டையன்
Updated on
1 min read

திமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று (நவ. 26) ராஜிநாமா செய்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி அணியில் ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்த நிலையில், கோபிசெட்டிப்பாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை செங்கோட்டையனும் ராஜிநாமா செய்துள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிகம் முறை (8 முறை வென்றார்) போட்டியிட்டு வென்றவர் என்ற பெருமைக்கு உரியவரான செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தின் வாக்குகளைக் கவருவதில் முக்கிய நபராக அறியப்பட்டு வருகிறார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், இனி அவர் எந்தக் கட்சியிலும் செங்கோட்டையன் இணையலாம். கட்சித் தாவல் தடைச் சட்டம் அவருக்கு பொருந்தாது.

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்துள்ள செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. தவெகவில் இணையப்போகிறீர்களா? என செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஒரு நாள் பொறுத்திருங்கள் எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com