

நவ. 29 முதல் டிச. 1 வரை தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்ற நிலையில் இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த 'சென்யார்' புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கைப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்,
"மலாக்கா ஜலசந்தியில் புயல் உருவாவது மிகவும் அரிதான ஒன்று. இதுவரை அப்பகுதியில் புயல் உருவாகவில்லை என வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. மலாக்கா ஜலசந்தியில் புயல் உருவானது இதுவே முதல் முறை.
இலங்கையின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக உருவாகலாம், ஆனால் அது குறுகிய கால புயலாகவே இருக்கும்.
இதனால் டெல்டா பகுதிகளில் மற்றும் கடலூர், பாண்டிச்சேரிக்கு வருகிற நவ. 29, 30 தேதிகளில் மழை இருக்கும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டைக்கு நவ. 30, டிச. 1 ஆகிய தேதிகளில் மழை இருக்கும்.
இதற்கு அருகில் உள்ள மாவட்டங்களில் லேசான மழை இருக்கும்" என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.