

சென்னையில் அமெரிக்காவின் எச்1பி விசா மோசடி நடைபெறுவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அந்நாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக அமெரிக்காவில் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும், அமெரிக்காவில் பணிபுரிவதற்கான எச்1பி விசா பெறுவதிலும் சில கட்டுப்பாடுகளையும் சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில், சென்னையில் எச்1பி விசா பெறுவது தொடர்பாக மோசடி நடந்து வருவதாக அமெரிக்க முன்னாள் எம்.பி.யும் பொருளாதார வல்லுநருமான டேவ் ப்ரட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``ஓராண்டுக்கு 85,000 பேருக்கு மட்டுமே எச்1பி விசா வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் வரம்புச் சட்டம் உள்ளது. ஆனால், இந்தியாவின் சென்னையில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தில் கடந்த 2024-ல் மட்டும் 2.2 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் வரம்பைவிட இது 2.5 மடங்கு அதிகம்; இது எப்படி சாத்தியம்?
இந்தியாவில் எச்1பி விசா பெறுவதில் மிகப்பெரிய அளவில் மோசடி நிகழ்கிறது. அவர்கள் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர்.
இந்தியாவில் இப்படி மோசடி செய்து, எச்1பி விசா மூலம் அமெரிக்கா வருபவர்கள்தான் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளையும் எதிர்காலத்தையும் பறிக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
மேலும், சென்னை தூதரகத்தில் பணியாற்றிய மஹ்வாஷ் சித்திகியும் இதனையே கூறினார்.
சித்திகி கூறுகையில், 2005 - 2007 இடையிலான ஆண்டுகளில் மட்டும் 51,000 போலியான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து வரக்கூடிய 80 சதவிகித எச்1பி விசா விண்ணப்பங்கள் போலியானவை. போலி ஆவணங்கள் கொண்டு விண்ணப்பிக்கப்படுகின்றன. சிலர் நேர்காணலில்கூட கலந்து கொள்ளாமல் மோசடி’’ என்று தெரிவித்தார். மேலும், ஹைதராபாதில் மோசடியாக எச்1பி விசா பெற்று தருவதற்காக ஒரு நெட்வொர்க்கே இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: இந்தியாவுடன் விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: கனடா வெளியுறவு அமைச்சா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.