மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேகமெடுக்கும் டிட்வா புயல்: தமிழகம் நோக்கி நகர்வு!

டிட்வா புயல்தமிழகம் நோக்கி நகர்வது பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :27 நவம்பர் 2025, 7:45 am

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமான டிட்வா புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று (புதன்கிழமை) காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், இன்னும் 3 மணிநேரத்தில் டிட்வா புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது (நவ. 27, வியாழக்கிழமை பகலில்) சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு - தென்கிழக்கே 640 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் புயலாக நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் வட தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயலால் காவிரி படுகை மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி அருகே ஆந்திரத்தில் கரையை கடக்க உள்ள நிலையில் தமிழகத்துக்கு 29,30 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.