

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய புயல் சின்னம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெற்று வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் கணிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“முன்பு கணிக்கப்பட்டதில் எந்த மாற்றங்களும் இல்லை. புயல் சின்னம், புயலாக மாறி சென்னை மற்றும் புதுவைக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு அருகில் கரையைக் கடக்குமா? அல்லது கடலில் நீடிக்குமா? என்பது பின்னர் தெரியவரும்.
நவம்பர் 29
மிக கனமழை பெய்யும் பகுதிகள் - நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி.
கனமழை பெய்யும் பகுதிகள் - தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி.
நவம்பர் 29 முதல் 30 வரை
மிக மழை பெய்யும் பகுதிகள் - சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு.
கனமழை பெய்யும் பகுதிகள் - திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை.
புயல் சின்னம் நகர்வதில் தாமதம் ஏற்பட்டால், மழை பெய்யும் நாள்களில் சிறிது மாற்றங்கள் இருக்கும். சென்னை மற்றும் புதுவைக்கு இடையே கரையைக் கடந்தால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் பெங்களூரு போன்ற உட்புறங்களிலும் மழை பெய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.