இருபெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவர் அண்ணன் செங்கோட்டையன்! விஜய்

செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் விடியோ வெளியிட்டது பற்றி...
விஜய்
விஜய்Photo : TVK
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் விடியோ வெளியிட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் வியாழக்கிழமை இணைந்தார்.

செங்கோட்டையனுக்கு தவெக துண்டை அணிவித்து, உறுப்பினர் அட்டையை அக்கட்சித் தலைவர் விஜய் வழங்கினார்.

இந்த நிலையில், செங்கோட்டையனை கட்சிக்கு வரவேற்று விஜய் வெளியிட்ட விடியோவில் தெரிவித்ததாவது:

”20 வயது இளைஞராக இருக்கும்போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தலைமையை ஏற்று, அவரது மன்றத்தில் இணைந்தவர், அந்த வயதிலேயே எம்எல்ஏ பொறுப்பை ஏற்றவர், அக்கட்சியின் இருபெரும் தலைவர்களுக்கு பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.

இப்படியாக 50 ஆண்டுகாலமாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவருடைய அரசியல் அனுபவமும், களப் பணியும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நம்முடன் கைக்கோர்க்கும் அவரையும், அவரின் ஆதரவாளர்களையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மாவட்டங்களின் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Vijay releases video welcoming Sengottaiyan to the party

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com