

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலுக்கு டிக்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஏமன் நாடு பரிந்துரைத்து இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் டிக்வா புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு புயலும் உருவான பிறகு, அதனை அடையாளம் காணுவதற்கு ஏதுவாக பெயர் சூட்டும் வழக்கம். ஆனால் புயல் உருவான பின்னர்தான் அந்த பெயரை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். ஆனால் இதற்காக 13 உறுப்பு நாடுகள் ஏற்கெனவே பெயரைப் பட்டியலிட்டு வழங்கியிருக்கிறது.
அந்த அட்டவணையின்படி, தற்போது இலங்கை அருகே உருவாக்கும் புதிய புயலுக்கு 'டிக்வா' என்ற பெயருக்கு அரபு மொழியில் 'தீவு' என்ற அர்த்தம் சொல்லப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள 'சோகோட்ரா' தீவின் ஒரு பகுதியின் பெயராகக் கூட இது இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அரபு மொழியில் டிக்வா என்பதற்கு அழகான மலர் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று(நவ. 26) புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த சென்யார் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.