

டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கையையடுத்து தமிழகத்தில் 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ. 28, வெள்ளிக்கிழமை) பிற்பகல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்றுள்ள 'டிட்வா' புயல் தமிழகத்தை நோக்கி நகரந்து வரும் நிலையில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையையடுத்து இன்று ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.28) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று மதியம்(அரை நாள்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.