

ஒரு தேர்தல் வெற்றியாவது வெற்றிருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைந்த பின் சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் பேசுகையில், விஜய் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
அதிமுக எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். ஒரு தேர்தல் வெற்றியாவது வெற்றிருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி. நான் பார்த்த முதல்வர் தலைவர் எம்ஜிஆர், 2ஆவது தலைவர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே ஆள வேண்டுமா. புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா. தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். காலங்கள் கனிந்து வருகிறது.
சட்டைப்பையில் எந்த தலைவரின் புகைப்படம் இருந்தாலும் விஜய் அரவணைப்பார். டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும்.
நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.