பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

போர்க்கால அடிப்படையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

News image

இபிஎஸ் (கோப்புப்படம்)

IANS

Updated On :29 நவம்பர் 2025, 3:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

போர்க்கால அடிப்படையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், டிட்வா புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளையும், கட்சி உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has urged the government to take cyclone precautions on a war footing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.