முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் பகுதியில் தொடரும் கனமழை: கோடியக்கரையில் கடல் சீற்றம்

வேதாரண்யம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், கோடியக்கரை கடல் சனிக்கிழமை தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

Published On :

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், கோடியக்கரை கடல் சனிக்கிழமை தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

இலங்கைக்கு அருகே நிலைகொண்ட புயலின் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் மழை தொடர்ந்து வருகிறது. வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு தரைக்காற்றுடன் சாரல் மழைப் பொழி, படிப்படியாக கனத்து தொடர் மழையாக நீடித்தது.

Story image

சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில் 145.6 மி. மீ, தலைஞாயிறு- 89.மி. மீ, கோடியக்கரை- 203. 4 மி. மீ மழை பதிவானது. சனிக்கிழமை காலை 8:30 முதல் மாலை 6 மணி வரை வேதாரண்யம் -76 மி. மீ, கோடியக்கரை -94 மி. மீ, தலைஞாயிறு -62 மி. மீ மழை பதிவானது.

Story image

கோடியக்கரையில் அதிக அளவு மழை பெய்த நிலையில், கோடியக்காடு கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முகாம் அமைத்து உணவு வழங்கப்படுகிறது. கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

Story image

வேதாரண்யம் நகரத்தில் பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்கிறது.

Story image

காந்திநகர், வேட்டவரன்காடு, மந்தித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலை, வடிகால், குடியிருப்புகளை சூழ்ந்து சுமார் 3 அடி தண்ணீர் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அளவில் பாதிக்கச் செய்துள்ளது.

Story image

இந்த பகுதியில் மீட்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதான வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் வெள்ளநீர் வடிவதை தடுப்பதால் சம்பா நெல் வயல்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. அகஸ்தியம்பள்ளி உப்பளப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் கடல் போல காணப்படுகிறது.

Story image

சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு காற்றும் மழையும் ஓய்ந்து காணப்பட்ட நிலையில், அவ்வப்போது லேசான தூறல் இருந்து வந்தது. மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று கடலை நோக்கி வீசி வருகிறது.

Summary

The Kodiyakarai sea continued to be rough on Saturday, as heavy rain lashed the Vedaranyam area.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.