புதுச்சேரியில் திங்கள்கிழமை(டிச. 1) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகல் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட தமிழக - புதுவை கடற்பகுதிகளில் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரி அருகே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ளது. இது, வடக்குத் திசையில் நகர்ந்து திங்கள்கிழமை(டிச. 1) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Summary
Schools in Puducherry will be closed tomorrow (Dec. 1)!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தீவிரமடையுமா பருவமழை?
இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் ஜூலை 3ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



