தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
தமிழக அரசு- கோப்புப்படம்
Updated On :1 அக்டோபர் 2025, 11:00 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக

(i) .ப . நடராஜன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம்,

(ii) திரு.மா.சத்யாநந்தன், காவல் உதவி ஆய்வாளர், ஆரோவில் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்,

(iii) சு. மணிகண்டன், காவல் உதவி ஆய்வாளர், சின்னசேலம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்,

(iv) க. நடராஜன், காவல் உதவி ஆய்வாளர், புத்தூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம் மற்றும்

(v) வா. பெ. கண்ணன், தலைமைக் காவலர்-1403, மத்திய நுண்ணறிவுப் பிரிவு, சேலம் மாவட்டம், ஆகியோருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்விருது, முதல்வரால் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

CM Stalin on wednesday ordered the award of the Gandhi Adigal Police Medal for 2024 to several police personnel for their outstanding work in prohibition enforcement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.