வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது பற்றி...
எரிவாயு சிலிண்டர் விலை  உயர்வு
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
Published on
Updated on
1 min read

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 16 உயர்ந்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1754 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சிலிண்டர்களின் விலை புது தில்லியில் ரூ.1,595.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,700.50 ஆகவும், மும்பையில் ரூ.1547 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

இதனிடையே, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதன் விலை சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இம்மாதம் சற்று அதிகரித்துள்ளது.

Summary

The price of a cylinder for commercial use in the country has increased by Rs. 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com