நெல் கொள்முதல் தொடர்பாக டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு இருப்பு, நகர்வு மற்றும் அரவை தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
தமிழகத்தில், செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வரும் நிதியாண்டுக்கான நெல் கொள்முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையின் போது கேட்டறிகிறார் என்று கூறப்படுகிறது.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது தமிழகம் முழுக்க பரவலாக மழை பெய்து வருவதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவை குறித்தும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலளளர் சத்யபிரத சாகு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொள்முதல் செய்த நெல்லுக்கு ரூ.24.23 கோடி பாக்கி: விவசாயிகள் வேதனை தீா்க்கப்படுமா?

நெல் மூட்டைகளை நகா்வு செய்யக் கோரி கொள்முதல் நிலைய பணியாளா்கள் வேலைநிறுத்தம்
நெல் கொள்முதல் புகாா்கள்: உதவி மைய எண்களை காட்சிப்படுத்த அமைச்சா் வெங்கடரமணன் உத்தரவு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் மட்டுமே நெல் கொள்முதல்: மாவட்ட ஆட்சியா் உறுதி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



