ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ராமநாதபுரம் பேராவூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.738 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கிவைத்தார்.
ராமநாதபுரத்தில் ரூ. 176 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டடங்களை திறந்துவைத்தார்.
மேலும், ரூ. 134 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 50,712 பயனாளிகளுக்கு ரூ. 426 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.