ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்
விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து
Published on
Updated on
1 min read

ஆற்காடு அருகே கண்டெய்னர் லாரியின் மீது சொகுசு பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானதுடன், 23 பேர் படுகாயமடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் கான்கிரீட் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் 25 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் பலியானார்; பேருந்தில் பயணித்த 23 பேர் படுகாயமடைந்தனர்.

ஆற்காடு அருகே உள்ள சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 25 பயணிகளை ஏற்றிக் கொண்டு, சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது காஞ்சிபுரத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வீடு கட்டும் கான்கிரீட் சிமெண்ட் தூண்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மீது சொகுசு பேருந்து ஓட்டுநர் எதிர்பாராத விதமாக தூக்க கலக்கத்தின் காரணமாக வேகமாக மோதியதில் 23 பேர் பலத்த படுகாயமடைந்தனர். சொகுசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஹரிஷ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆற்காடு நகர போலீசார் காயமடைந்த 23 பேரை தனியார் மருத்துவமனை ஆற்காடு மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான சொகுசு பேருந்தை இருந்து கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி சரி செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

Summary

Arcot: Private Bus collides with Container Lorry in accident; Bus Driver killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com