
கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளர் பணித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவுச் சங்கங்களின கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் / தலைவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 06.08.2025 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அதற்கான எழுத்துத் தேர்வு 11.10.2025 அன்று நடத்தப்படவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய www.drbchn.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு archn.rcs@gmail.com மின்னஞ்சல் மற்றும் 044 - 24614289 தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.