காலையில் வெய்யில்... பிற்பகல் பரவலாக மழை!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கோயம்பேடு, அசோக் நகர், வடபழனி, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், வாகனகரம், திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு, மலையம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
காலை முதல் கடும் வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பிற்பகலில் மழை பெய்து வருகிறது.
வட கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த சக்தி புயல், மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றதால், தமிழகத்தில், அக்டோபர் 9ஆம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க |வேலுச்சாமிபுரத்தில் ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு ஆய்வு!
Rain in chennai ans sunurbans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

