

விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து வேலுச்சாமிபுரத்தில் ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில் கரூர் வந்தனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்திற்கு சென்று அங்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் காலணிகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் வசிப்பவர்களிடம் நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது, நெரிசலின் போது விஜயின் வாகனத்திற்கு அருகில் கூடி இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யார் நெரிசலில் சிக்கினார்கள், நெரிசல் ஏற்பட காரணம் என்ன என்பன குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நெரிசலில் உயிரிழந்தவர்கள் எதற்காக விஜயின் பிரச்சாரத்தை காண சென்றார்கள் என்பன குறித்தும் கேட்டறிந்தனர். இந்த குழுவில் ஐஜி அஸ்ரா கர்க் உடன் காவல் கண்காணிப்பாளர்கள் விமலா மற்றும் சியாமளா தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.