
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்ததாவது:
”தீபாவளி பண்டிகையையொட்டி, அக். 16 முதல் 19 வரை சென்னையில் இருந்து 14,208 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 6,100 சிறப்பு பேருந்துகள் என 20,372 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக, 3 நாள்களுக்கு 10,529 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள் செயல்படும். தீபாவளி சிறப்புப் பேருந்துகளில் செல்ல இதுவரை 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டைப் போல, இந்த தாண்டும் 300 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்புப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவா்கள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊா்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல, தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தெற்கு ரயில்வே சாா்பில் 108 ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதன்படி பிறமாநிலங்களுக்கு 54 ரயில்களும், தெற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளுக்கு 54 ரயில்களும் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.