
எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டதால் அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் கட்சியாக திமுக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தென்காசியில் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றுகூட திமுக நிறைவேற்றவில்லை.
மக்களை ஏமாற்றியே முதல்வர் ஸ்டாலின் ஓட்டு வாங்குகிறார். எங்கேயாவது பிரச்னை வந்தால் அதில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சியாக திமுக உள்ளது.
திமுகவை வீட்டுக்கு அனுப்ப எடப்பாடி பழனிசாமி பலமான கூட்டணியை அமைத்திருக்கிறார். அந்த கூட்டணிதான் வெல்லும். வருகின்ற தேர்தலில் திமுகவின் நாடகங்கள் எதுவும் எடுபடாது.
விஜய் திமுகவைத்தான் கடுமையாக எதிர்க்கிறார். ஆகவே, திமுகவை தோற்றகடித்த அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும்.
பொதுக்கூட்டங்களில் கூடுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு.
ஆனால், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் அதை தடுத்து நிறுத்தும் பணியைதான் செய்கிறது. இது கண்டிக்கத்தக்கது. கரூர் கூட்டத்திற்கும் திமுக அரசு தகுந்த பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.