கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் - தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவைத்துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று(அக். 7) நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

”தமிழகத்தில் ஜன. 1 ஆம் தேதி முதல், தற்போது வரை 15,796 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்த நிலையில், தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் டெங்கு பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் ஒரு இறப்புகூட நேரகூடாது என்பதுதான் தமிழக அரசின் முதன்மையான நோக்கம். பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Summary

Public Health Minister M. Subramanian has stated that dengue cases have increased over the past two weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com